×

25ல் சொர்க்க வாசல் திறப்பன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு காத்திருப்பு போராட்டத்திற்கு திடீர் தடை திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் கஞ்சி காய்ச்சி, மறியல்


திருச்சி, டிச. 15: டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக டெல்டாவில் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சியில் கஞ்சி காய்ச்சி சாலை மறியல் செய்த விவசாயிகள் 117 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் நேற்று 19வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், திமுக, மதிமுக, விசி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் குவிந்தனர். இதனால் முன்னெச்சரிக்கையாக கலெக்டர் அலுவலகங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட் ேடார் திரண்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் சோமு, விசி கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை, அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலீசார் தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு விவசாயிகள் சாலையிலேயே அடுப்பு பற்ற வைத்து, கஞ்சி காய்ச்சினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மற்ற விவசாய சங்கங்களுக்கு போராட அனுமதி அளிப்பதுபோல் எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்புலன்ஸ்சுக்கு எந்த இடையூறும் இல்லாமல் விவசாயிகள் வழிவிட்டனர்.  தொடர்ந்து மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்ட அயிலை சிவசூரியன், வைரமணி மற்றும் 14 பெண்கள் உள்பட 117 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். விவசாயிகள் போராட்டத்தால் வெஸ்ட்ரி ரவுண்டானா மற்றும் மிளகுபாறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த மக்கள் அவதிக்குள்ளானதுடன், நீண்ட தூரம் நடந்து வந்து கலெக்டர் அலுவலக பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர்.

Tags : opening ,sit-in protest ,policemen ,Office ,Trichy Collector ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா