மணப்பாறை அருகே கருவேலம் காட்டுக்குள் 7 மயில்கள் மர்ம சாவு வனத்துறையினர் விசாரணை

மணப்பாறை, டிச.15: மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி கிராமம் இடையப்பட்டியான்பட்டியில் உள்ள மோலக்குளம் அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான சீமை கருவேலம் காட்டுக்குள் நேற்று பிற்பகல் சில மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சலில் இருந்த சிறுவன் கிராம மக்களிடம் தகவல் அளித்துள்ளான். அதனை தொடர்ந்து முருகன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது 5 ஆண் மயில்கள் மற்றும் ஒரு பெண் மயில் இறந்து கிடந்துள்ளது. ஒரு மயில் மட்டும் உயிருக்கு போராடி சிறிது நேரத்தில் அதுவும் பரிதாபமாக இறந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மயில்களின் உடல்களை ஆய்வு செய்து மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories:

>