×

சீசன் முடிய 2 மாதங்களே உள்ள நிலையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தை ரசிக்க அனுமதி மறுப்பு

மன்னார்குடி, டிச.15: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் வடுவூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழக வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிகளவில் இருப்பதால் எந்த நேரமும் இங்கு ரம்யமான சூழல் நிலவும். இதனால் வடுவூரில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயதிற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் இனப் பெருக்கத்திற்காக வரும் 38 வகையான ட பறவைகளை வடுவூர் ஏரி வெகுவாக ஈர்க்கிறது. இன பெரு க்கத்திற்காக வரும் பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தங்களின் நாடுகளுக்கு மீண்டும் பறந்து செல்கிறது.

இந்நிலையில், நடப்பாண்டு மத்திய ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆசியா, கஜ கஸ்தான், ஆப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வடுவூர் அமைந்துள்ள பாதுகாக்கப்பட பறவைகள் சரணாலயத்தில் குவிந்து உள்ளன. சீசன் காலங்களில் இந்த பறவைகளை பார்க்க டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரு வதுண்டு. அவர்களுக்கு தேவையான வசதிகளை வனத்துறையினர் செய்துள் ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை களில் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வேதனையில் ஆழ்த்தியது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் வடுவூர், கோடியக்கரை, உதயமார் தாண்டபுரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வடுவூர் கிராமத்தை சேர்ந்த சுற்றுச்சுழல் ஆர்வலர் மலர் மன்னன் கூறுகையில், வடுவூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப் பட்ட பறவைகள் சரணாலயத்தில் தற்போது சீசன் அருமையாக உள்ளது. அயல் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. பனி சீசன் என்பதால் ஏரியில் ரம்யமான சூழல் நிலவுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
இருப்பினும் தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சாலை யோரங்களில் நின்று பறவைகளை ரசித்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருவதாலும், சீசன் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதாலும் வடுவூர், கோடியக்கரை, முத்துப்பேட்டை, உதயமார்தாண்டபுரம் ஊர்களில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் சுற்றுலா பயணிகளை பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

Tags : Vaduvoor Bird Sanctuary ,season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு