×

80வது ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் புதின், கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு

பெய்ஜிங்: 2வது உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராக பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3ம் தேதி வெற்றி தினத்தை சீனா கொண்டாடி வருகின்றது. இந்த ஆண்டு 80 ஆண்டுகள் நிறைவைக்குறிக்கும் வகையில் வருகிற 3ம் தேதி வெற்றி தின விழா மற்றும் சீன ராணுவத்தின் அணிவகுப்பு நடைபெறுகின்றது. இந்த விழாவில் ரஷ்ய அதிபர் புதின் உட்பட 26 வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வ சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

Tags : Victory Day ,Putin ,Kim Jong Un ,Beijing ,China ,Japan ,World War II. ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...