×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாப்பாரப்பட்டி, ஆக.29: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில், 9ம் வார்டு முதல் 15ம் வார்டு வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா தலைமை ஏற்று வருவாய்த் துறை அலுவலர் சுஜாதா, துணை தாசில்தார் குமரன், பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், நகர செயலாளர் சண்முகம், பேரூராட்சி எழுத்தர் சபரி ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு, மருத்துவக் காப்பீடு மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு ேகாரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags : Stalin ,Papparapatti ,Special ,Ward 9 ,Ward 15 ,Pennagaram Taluk ,Papparapatti Town Panchayat ,Town ,Panchayat ,Executive Officer ,Ayesha ,Revenue Department Officer ,Sujatha ,
× RELATED ஓய்வூதியர் தின விழா