×

வீரகனூர் அருகே மர்மமாக இறந்து கிடந்த மயில்

கெங்கவல்லி, ஆக.29: வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து இரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று வீரகனூர் தெற்குமேடு ஓடைப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த மணிகண்டன் என்பவர், கெங்கவல்லி வனசரகர் கமலக்கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனவர் ரஷ்யா பேகம், பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு ெசன்று, இறந்து கிடந்த மயிலை மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வனப்பகுதியில் புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Weerganur ,Kengavalli ,Weeraganur ,Ithapartha ,Manikandan ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து