நெல்லை, ஆக.29: அம்பை அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் பெரியசாமி (35). இவர் கடந்த 2018ம் ஆண்டு பாளையங்கோட்டை தாலுகா பகுதியில் திருட்டு வழக்கில் பெரியசாமியை தாலுகா போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் இவ்வழக்கு மீதான விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடந்துவந்த போதும் ஆஜராகாத பெரியசாமி கடந்த மூன்றரை மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாளை தாலுகா போலீசார், பெரியசாமியை கைதுசெய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
