×

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் கி.பாலசுப்பிமணியம், பொது, மறுவாழ்வுத் துறை கூடுதல் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத் துறை இயக்குநராக ஷரண்யா நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறி, டிட்கோ செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக பானோத் ம்ருகேந்தர் லால் மாற்றப்பட்டுள்ளார்.

Tags : Chief Secretary ,Murukanantham ,Tamil Nadu ,Chennai ,Murukanandam ,Sajjanxing Ra Sawan ,State Secretary ,Department of Public Rehabilitation ,Department of Project and Development ,Tamil Nadu State Election Commission ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...