கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வீடியோ திரை

கும்பகோணம், டிச. 15: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 99வது ஆண்டு விழாவையொட்டி நாகேஸ்வரன் கோயிலுக்கு வீடியோ திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலின் தல வரலாறு மற்றும் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்புகளை வீடியோ திரையில் நாகேஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக வீடியோ திரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கி நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி தலைமை வகித்து வீடியோ திரையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இயக்குனர்கள் நிரஞ்சன் சங்கர், அசோக், அசோக்குமார், சிரஞ்சீவிராஜ், எழில்ஜோதி, கோபால், கேசவமூர்த்தி, நாகராஜன், நிரஞ்சன்கனி, பிரபாகரன், சுரேஷ்குமார், விஜயதுரை, துணை தலைமை அதிகாரி சிதம்பரநாதன், பொது மேலாளர்கள் ஆறுமுகபாண்டி, இன்பமணி, சூரியராஜ், திருச்சி மண்டல மேலாளர் நடராஜன், கும்பகோணம் கிளை மேலாளர் சிவசங்கர் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>