×

சோமவாரத்தையொட்டி திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

புதுக்கோட்டை, டிச.15: சோமவாரத்தையொட்டி திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற சோழர் காலத்து பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமா வாரத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரவி புயல் காரணமாக கோயிலுக்குள் மழைநீர் குளம்போல் நின்றதால் சங்காபிஷேக விழா நடைபெறவில்லை. நான்காவது சோம வார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி சுவாமி அம்பாள் எழுந்தருள செய்து பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் செய்வது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து வழிபாடு செய்தனர்.

பின்னர் ஹோமகுண்டத்தில் சுயம்புலிங்க சிவன் வடிவில் நெல் தானியம் கொண்டு அமைத்து 108 வலம்புரி சங்கு அடிக்கி வைத்து அதில் புனித நீர் ஊற்றி வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் யாக பூஜை முடிந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு லிங்க சிவன் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு 108 வலம்புரி சங்கில் உள்ள புனித நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு மகா தீபம் காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Thiruvarangulam Arangulanathar Temple ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ