×

இயந்திரத்தை கொண்டு சேதப்படுத்தியதால் அரும்பாவூர் ஏரி அணைக்கட்டுக்கு பேராபத்து

பெரம்பலூர்,டிச.15:கல்லாற்றின் குறுக்கே 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரும்பாவூர் பெரியசாமி கோவில் அணைக்கட்டு சிலரால் உடைக்கப்பட்டதால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு. இதனை விரைந்து சீரமைத்துத் தர வேண்டுமென அ.மேட்டூர் கிராம விவசாயிகள் பெரம் பலூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளான ரெங்கநா தன், செந்தில்குமார், விவேகானந்தன், மனோகரன், நடராசன், சிக்கன் உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக் டர் வெங்டபிரியாவிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து வரும் சின்னமுட்லு கல்லாற்றுத் தண்ணீர் அ.மேட் டூர், தொண்டமாந்துறை, வெங்கலம், கிருஷ்ணாபுரம் வழியாக செல்வதால் இப்பகுதி விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மஞ்சள், மர வள்ளிக் கிழங்கு என பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 90ஆண் டுகளுக்கு முன்பு, 1930-ல் கல்லாற்றின் குறுக்கே அரு ம்பாவூர் பெரியசாமி கோவில் அருகே அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு, அதிலு ள்ள 3 துளைகள் மூலம் அரும்பாவூர் பெரிய ஏரிக்கான நீர் வரத்து அமைக்கப்பட் டது. இந்த அணைக்கட்டில் உள்ள 3 துளைகள் உள்ள பகுதியை தற்போது அரும் பாவூரைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே இயந்திரத்தை வைத்து உடைத்து விட் டனர். இதனால் கனமழை பெய்து வெள்ள நீர் பெருக்கெடுத்துவந்தால், அரும்பாவூர் ஏரி தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் ஏரிக்கரை உடைந்து, அரும்பாவூர் கிராமம் தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது.

மேலும் பெரியசாமி கோவில் அணைக்கட்டு க்கும் அ.மேட்டூர் கிராமத்திற்கும் இடையேவுள்ள தென்னந்தோப்பு அணைக்கட்டு, அருணாசல ரெட்டியார் அணைக்கட்டு ஆகியவற்றின் இடையேவுள்ள விவசாயப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் தொண்ட மா ந்துறை, வெங்கலம் கிருஷ் ணாபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அப் பகுதியினர் போதுமான அளவு சாகுபடி செய்ய முடியா த அவலநிலை ஏற்படும். எனவே 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரமான அணைக் கட்டினை விரைந்து போர்க்கால அடிப்படை யில் சீரமைத்து ஷட்டருடன் கூடிய மதகுகள் அமைத்து, இருபகுதி பாசனதாரர்களும் பயன்படும் விதமாக பொ துப் பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க கே ட்டுக் கொள்கிறோம் என அந்த புகார்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Arumbavoor Lake Dam ,
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...