×

விரைந்து சீரமைக்க கலெக்டரிடம் மனு டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர், டிச.15:டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங் கிணைப்புக் குழு, அனைத் து தொழிற்சங்கங்கள், அ னைத்துக் கட்சிகள் சார்பா க தொடர்காத்திருப்புப் போராட்டம் நேற்று தொடங்கியது. டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவ சாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெரம்பலூர் பாலக்கரையில் அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங் கிணைப்புக்குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்துக் கட்சிகள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மாணவர் இளைஞர் மன்றம், மாதர் சங்க கூட்டமைப்பு ஆகியவை சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

போராட்டத்திற்கு அனைத்து விவசாய, தொழிற் சங் கங்களின் போராட்ட ஒருங் கிணைப்புக்குழு தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், இ.கம்யூ. மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மதிமுக நிர்வாகிகள் துரைராஜ், ஜெயசீலன், விசிக, தமுமுக, மமக, இயூமுலீக், மக்கள் நீதி மையம், திக, இந்திய ஜனநாயக கட்சி, கரும்பு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இளைஞர் கூட்டியக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் சின்னதுரை கலந்து கொண்டு சிறப்புரை பேசினார். காலை 10மணிக்குத் தொ டங்கி மாலை 5 மணிக்கு முடிந்த இந்த காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் சங்க, அ னைத்துத் தொழிற் சங்க நிர்வாகிகள் 200க்கும் மே ற்பட்டோர் கலந்து கொண் டனர். இன்று (15ம்தேதி) இதே இடத்தில் 2வதுநாள் காத்திருப்பு போராட்டம் நடை பெற உள்ளது.

Tags : Collector ,reorganization ,party ,Farmers Association ,Delhi Farmers Struggle ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...