பெரம்பலூர், டிச. 15: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிபி 9ம் நூற்றாண்டில் பராந்தகச்சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. சோமவார யாகபூஜையை தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் தடைக்காக பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 வலம்புரி சங்கு தீர்த்தம் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை.