- இந்தியா
- எங்களுக்கு
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருப்பூர்
சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; அமெரிக்காவின் வரியால் திருப்பூரில் ரூ.3000 கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எடுக்கவும், பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
