கரும்பு விற்பனை மும்முரம் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு கரூரில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு காத்திருப்பு போராட்டம்

கரூர், டிச. 15: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் கடந்த இரண்டு வாரமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் கலெக்டர் அலுவலகம்  எதிரே, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் சுயாட்சி இந்தியா தேசிய நிர்வாகி, கிறிஸ்டினா சாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும், விவசாயிகளும் என 70க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக, கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காத்திருப்பு போராட்டம்  மாலை 5 மணிக்கு மேலும் தொடர்ந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 34 பேரை  போலீசார் கைது செய்தனர்.

Related Stories: