தமிழக முதல்வர் நாளை வருகை விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சியில் இன்று துவக்கம்

கரூர், டிச. 15: கரூரில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி கரூர் மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சியில்இன்று காலை துவங்குகிறது. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த நிகழ்வு காலை 9மணியளவில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேளம்பாடி அண்ணாசிலை அருகே துவங்கவுள்ளது. அரவக்குறிச்சியில் காலை 9மணியளவில், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சிகள் துவங்குகிறது.

தொடர்ந்து, பள்ளப்பட்டி உலமாக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும், சின்னதாராபுரம் அமராவதி பாசன விவசாயிகள் சந்திப்பு நிகழ்வும், புன்னம்சத்திரம் 100 நாள் வேலை பணியாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை 6மணியளவில் வேலாயுதம்பாளையம் டிஎன்பிஎல் தொழிலாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும், 7மணியளவில் தளவாபாளையம் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறார். மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், அனைத்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், அணி அமைப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: