முதியவர் காயம் கார்த்திகை அமாவாசை: உப்புபாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் வழிபாடு

க.பரமத்தி, டிச.15: கார்த்திகை மாத அமாவாசை வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது.  இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல் குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், குன்னுடையான், பொன்னர் சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோயில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திபாளையம் பொன்னாட்சியம்மன் ஆகிய கோயில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Related Stories:

>