×

உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடி: 14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 14 நீதிபதிகளை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியான வழக்கமான நடைமுறை என்றாலும், ஒரே நேரத்தில் 14 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நீதித்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டம் கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், சென்னை, ராஜஸ்தான், டெல்லி, அலகாபாத், குஜராத், கேரளா, கொல்கத்தா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாட்னா (பீகார்) உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி இடமாற்றப் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜே. நிஷா பானு, கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் இதேபோல், நீதிபதி அதுல் தரன் (மத்தியப் பிரதேசம் – சட்டீஸ்கர்), நீதிபதி சஞ்சய் அகர்வால் (சட்டீஸ்கர் – அலகாபாத்), நீதிபதி தினேஷ் மேத்தா (ராஜஸ்தான் – டெல்லி), நீதிபதி சஞ்சய் குமார் சிங் (அலகாபாத் – பாட்னா), நீதிபதி டோனடி ரமேஷ் (அலகாபாத் – ஆந்திரா), நீதிபதி சுபேந்து சமந்தா (கொல்கத்தா – ஆந்திரா) உள்ளிட்ட 14 நீதிபதிகளின் இடமாற்றப் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை கொலீஜியம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்று ஒன்றிய சட்ட அமைச்சகத்தால் அரசாணை வெளியிடப்படும் பட்சத்தில் 14 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாறுதல் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Supreme Court ,Delhi ,Supreme Court Collegium ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...