×

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: காலை 8 மணி முதல் 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விநாயர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு இன்று சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை கால அட்டவணை இன்று பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Vinayagar Chaturthi Festival ,Vinayar Chaturthi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது