×

சம்பளம் வழங்காததால் வேட்டைத்தடுப்பு காவலர்கள் பரிதவிப்பு


பந்தலூர்,டிச.15 : வனத்துறையில் பணிப்புரியும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் யானை கண்காணிப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வங்காததால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். கூடலூர் வனக் கோட்டத்தில் பணிபுரியும்   வேட்டை தடுப்பு காவலர்கள் யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் என 25 பேருக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப்பட்டியல் தயாரிக்க தெரியாத நிலையில் வனத்துறை ஊழியர்கள் உள்ளதாகவும், சம்பளம் வழங்க வேண்டிய பணம் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் ஊதியம் வழங்காததோடு 25 பேரை வேலையை விட்டு நிறுத்தி வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் காரணமாகவே பணியாளர்கள் பற்றாக்குறையால் யானை நடமாட்டத்தை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து இரவு,பகலாக பணியில் ஈடுபட்டு வரும் இந்த பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்த சம்பளமும் மாதா, மாதம் வழங்கப்படாததால் அதில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை கண்காணிப்பு பணியாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

Tags : guards ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா