×

கொடைக்கானலில் ஆவணங்களின்றி இயங்கிய 3 வாகனங்களுக்கு அபராதம்

கொடைக்கானல், ஆக. 27: கொடைக்கானல் பகுதியில் ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் வாகன உரிம பதிவு, எப்சி புதுப்பிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன.

இதில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 சுற்றுலா வாகனங்கள், 1 மேக்சி கேப் வாகனம் என மொத்தம் 3 வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். இதுபோல் சோதனை தொடர்ந்து நடைபெறும், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது அபராதம், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

 

Tags : Kodaikanal Kodaikanal ,Kodaikanal ,Watalakundu ,Regional ,Traffic Officer ,Ilango ,Kodaikanal Lake Road ,
× RELATED ஓய்வூதியர் தின விழா