அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

ஆனைமலை, டிச. 15:  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை அன்று அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த மாதத்திற்கான அமாவாசை நேற்று நடந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு அம்மனை தரிசிக்க குவிந்தனர். கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிகள் இருப்பதால், அமாவாசைக்கு முந்திய நாள் இரவு கோயில் நடை மூடப்பட்டது. இருப்பினும் வழக்கம்போல் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசித்து சென்றனர்.

Related Stories:

>