×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைகளில் ஸ்டார் விற்பனை

பொள்ளாச்சி, டிச.15:  பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்பை உணர்த்தும் வகையில் கிறிஸ்தவர்கள் இப்போதிலிருந்தே வீடுகளின் முன்பு பல வண்ணங்களில் ஸ்டார் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். மேலும் பல கிறிஸ்தவ வீடுகளில் ஏசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நகரில் கடைவீதி, இமாம்கான்வீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கும் கடைகளில் ஸ்டார் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா, குடில் அமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவை புதிது புதிதாக வரபெற்றுள்ளன. இதை கிறிஸ்தவர்கள் பலர் விரும்பி வாங்கி செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : stores ,Christmas ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...