×

சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கடன் வேண்டும் தண்டுவடம் பாதித்தோர் கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், டிச. 15: சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தண்டுவடம் பாதித்தோர் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவது போல இலவச வீடு கட்டித்தர வேண்டும்.

சக்கர நாற்காலியுடன், உள்ள, சாய்வு தளத்துடன் கூடிய கழிப்பறை கட்டித்தர வேண்டும். சுயதொழில் செய்வதற்கு சிறிய கடைகள் அமைத்து தந்து, அதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க வேண்டும். வாட்டர் பெட், ஏர் பெட்டை இலவசமாக வழங்க வேண்டும். ஆந்திராவை போல் மாத உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவ சிகிச்சையை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும், மறுவாழ்வு மையங்கள் துவக்க வேண்டும்.

தற்போது வழங்கி உள்ள மதிப்பு குறைந்த பேட்டரி சக்கர நாற்காலிகளை சர்வீஸ் செய்வதற்கு மையங்கள் அமைக்க வேண்டும். தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஜயலட்சுமியிடம் அளித்தனர்.

Tags : Victims ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...