×

வத்தலக்குண்டுவில் ரூ.75 லட்சம் மதிப்பு நகை வாங்கி மோசடி ரியஸ் எஸ்டேட் புரோக்கர் கைது

திண்டுக்கல், டிச. 15: வத்தலக்குண்டுவில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் திண்டுக்கல் டிஐஜி, எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில், ‘வத்தலக்குண்டு வடக்கு மல்லணம்பட்டியை சேர்ந்த விஜயராஜன் (38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தனது அண்ணன் நகை கடை வைத்திருப்பதாகவும் அறிமுகப்படுத்தி எங்களிடம் நகைகளை வாங்கி வந்தனர்.

இந்நிலையில் 280 பவுன் தங்க நகைகளை வாங்கி கொண்டு அதற்குரிய மதிப்பான ரூ.75 லட்சத்திற்கு ரூ.50 லட்சம் மற்றும் ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதுகுறித்து விஜயராஜனிடம் கேட்ட போது பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்ததுடன், மிரட்டலும் விடுத்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நகைகளை மீட்டு தர வேண்டும்’ என கூறியிருந்தார். இப்புகார் மனு தொடர்பாக டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகை வாங்கி மோசடி செய்தது தெரியந்தது. இதையடுத்து போலீசார் விஜயராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Riyas ,estate broker ,
× RELATED பழநியில் ரியல் எஸ்டேட் புரோக்கர்...