×

ஊட்டி, பந்தலூரில் முதல்வரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, டிச. 11: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஊட்டியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. துணை பொது செயலாளரும் நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர், ராசாவின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும், ராசாவின் உருவபொம்ைமயை எரிப்பு சம்பவத்தை கண்டித்தும் ஊட்டி நகர தி.மு.க. சார்பில் ஏடிசி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துைண செயலாளர் இச்சுபாய் நன்றி கூறினார்.

பந்தலூர்: நீலகிரி எம்.பி.யும் தி.மு.க. துணை பொது செயலாளருமான ராசாவின் உருவபொம்மையை நேற்று முன்தினம் பந்தலூர் மாற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் அ.தி.மு.க.வினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும் அவதூறு பேசி, அத்துமீறி நடந்துகொண்ட அ.தி.மு.க.வினர் மீது  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும் நேற்று பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் நகர தி.மு.க. செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினரின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் தென்னரசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், முன்னாள் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன், மூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், துணை அமைப்பாளர் நவநீதராஜ், எல்.பி.எப். தலைவர் மாடசாமி, நிர்வாகிகள் ஞானசேகர், சேகர், பன்னீர்செல்வம், கலியன் டெயிலர், அசரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,protests ,Ooty ,Pandharpur ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...