×

ஓராண்டிற்கு பிறகு மீண்டும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு

வால்பாறை, டிச.11:  வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள நடைபாதையில் ஓராண்டிற்கு பிறகு மீண்டும்  கடைகள் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளன. இக்கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள நடைபாதை, கடந்த 2019 நவம்பர் மாதம் டைல்ஸ் ஒட்டி அழகுபடுத்தப்பட்டது. பணிகள் முடிந்ததும் மீண்டும் கடைகளால் ஆக்கரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால், எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் சென்றதால் வால்பாறை நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாட்சியருக்கு மாவட்ட கலெக்டர், நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நடைபாதை கடையினர் தீபாவளிக்கு பின் கடைகளை அகற்றிவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால், கடைகளை அகற்றவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் 24ம் தேதி நகராட்சி ஆணையாளர் சரவணபாபு உத்தரவின்பேரில், கடைகள் அகற்றப்பட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளன. கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கி உள்ள நிலையில் மாணவர்கள் நடைபாதையில் நடக்க வழிவகை செய்ய நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags : sidewalk shops ,
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்