×

கோவையில் பாடகர் எஸ்.பி.பி. நினைவு வனம்

கோவை, டிச. 11: கோவை சிறுதுளி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பேரூர் செட்டிபாளையத்தில் 1.8 ஏக்கர் பரப்பளவில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவாக எஸ்.பி.பி. வனம் நேற்று துவக்கப்பட்டது. பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மறைந்தார். அவரது நினைவாக கோவை பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், எஸ்.பி.பி. வனம் உருவாக்கும் நிகழ்ச்சி பச்சாபாளையத்தில்உள்ள ஆபீசர் காலனியில் நேற்று நடந்தது. கீரின் காலம் அமைப்பின் நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகர் விவேக், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் பங்கேற்று மரங்களை நட்டு எஸ்.பி.பி. வனத்தை துவக்கி வைத்தனர். இதில், எஸ்.பி.பி.யின் 74 வயதை நினைவு கூறும் வகையில், ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை,தேக்கு, பண்ருட்டி பலா, சந்தன மரனம், மா மரம் என இசை கருவிகள் தயாரிக்கபடும் 74 வகையான மரங்கள் இசை குறியீடு வடிவத்தில் நடப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் கூறுகையில், “மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்நினைவாக முதன் முறையாக இசை வனம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் அனைவரையும் தனது குரலால் ஈர்த்தவர். அவர் உடல் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இசை வனத்தில் இசை கருவிகள் செய்யக்கூடிய மரங்கள் மற்றும் விருச்சக மரங்கள் நடப்பட்டுள்ளன” என்றார்.
சமீபத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் குறித்து கருத்து தெரிவித்த, நடிகர் விவேக், “நடிகர், நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்யக்கூடாது. தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் முடிவு. பிரச்சனைகளை, நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஓ.டி.டி. தளங்கள் திடீர் மழைபோல, வீட்டில் எப்போதும் படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். மக்கள் தியேட்டர் செல்வதைதான் விரும்புவார்கள். ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து நான் பார்ப்பேன். மக்கள் விரும்புவர்களுக்கே ஆதரவு” என்றார்.

Tags : Singer SBP ,Coimbatore Memorial Forest ,
× RELATED பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து...