×

10 மாதங்களாக தவணை கட்டவில்லை நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா ஜப்தி: நோட்டீஸை வாங்க மறுப்பு

சென்னை: கடந்த 10 மாதங்களாக தவணை கட்டதாத காரணத்தால் நடிகர் ரவி மோகனின் இசிஆர் சொகுசு பங்களா வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த வங்கி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீசை அனுப்பியுள்ளது. சென்னை இசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் சொந்தமாக சொகுசு பங்களா வைத்துள்ளார். இதில் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் வசித்து வந்தனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, ரவி மோகனும் ஆர்த்தியும் பிரிந்துவிட்டனர். ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் தனியார் வங்கியில் கடன் பெற்றுதான் இசிஆர் பங்களாவை ரவி மோகன் வாங்கி இருக்கிறார். அந்த பங்களாவுக்கு கடந்த 10 மாதங்களாக மாத தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. சொகுசு பங்களாவை தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதாகவும், கடந்த 10 மாதங்களாக மாத தவணை செலுத்தவில்லை என்றும் வங்கி தரப்பில் கூறிய நிலையில் நடிகர் ரவி மோகனின் இசிஆர் சொகுசு பங்களா வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த வங்கி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீசை அனுப்பியுள்ளது. கூரியர் மூலம் வந்த நோட்டீஸை வாங்க மறுத்த ரவி மோகன், நோட்டீசை வங்கியில் வந்து நேரில் பெற்றுக் கொள்கிறோம் என்று பெண் கூரியர் ஊழியரிடம் கூறியுள்ளார். இந்த சொகுசு பங்களாவில் தற்போது ரவி மோகனின் மனைவி ஆரத்தி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ravi Mohan ,Chennai ,ECR ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...