×

சாத்தூர் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

சாத்தூர்,டிச.11:  இ.ரெட்டியபட்டி கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த புதிய ரேஷன் கடை கட்டிடத்தை சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் திறந்து வைத்தார். சாத்தூர் அருகே இ.ரெட்டியபட்டியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் 2 கி.மீ நடந்து சென்று அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் கிராம மக்களின் கோரிக்கைய ஏற்று ரூ.8 லட்சத்து 80ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடைக்கு கட்டிடங்களை அதே கிராமத்தில் கட்டி நேற்று சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் திறந்து வைத்தார். உடன் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : ration shop ,Sattur ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா