- எங்களுக்கு
- பிரெஞ்சு அரசாங்கம்
- வாஷிங்டன்
- வேந்தர்
- இம்மானுவேல் மக்ரோன்
- தூதர்
- பிரான்ஸ்
- சார்லஸ் குஷ்னர்
- பிரஞ்சு
- ஜனாதிபதி
- மக்ரோன்
- இஸ்ரேல்
வாஷிங்டன்: பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே, பிரான்சுக்கான அமெரிக்க தூதர் சார்லஸ் குஷ்னர், பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘இஸ்ரேலுக்கு எதிரான பொது அறிக்கைகளும், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கூறுவதும் தீவிரவாத சக்திகளை துணிச்சலாக்குகிறது. வன்முறையை தூண்டுகிறது. இது பிரான்சில் யூதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனவே அதிபர் மேக்ரான் தீர்க்கமாக செயல்பட வேண்டும். வெறுப்பு குற்றச்சட்டங்களை விதிவிலக்கு இல்லாமல் அமல்படுத்த வேண்டும், யூத பள்ளிகள், ஜெப ஆலயங்கள், வணிகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ’’ என கூறியிருந்தார்.
இதற்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரின் குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் உறுதியாக நிராகரிப்பதாகவும், சர்வதேச சட்டத்தையும், மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற விதிகளை மீறுவதாகவும் கூறி உள்ளது. இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் குஷ்னரின் கடிதத்திற்கு அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர் சார்லஸ் குஷ்னர், அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
