×

தேனியில் விசிக ஆர்ப்பாட்டம்


தேனி, டிச. 11: தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தேனி பங்களா மேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில், ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Vizika ,demonstration ,Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்