×

3 கிமீ அலைய முடியல சாமி அத்தானூரில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.11: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அத்தானூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அத்தானூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. இதனால் பொதுமக்கள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ள காவனூரில் சென்று தான் பொருட்கள் வாங்கி வரவேண்டும். செல்லும் வழியில் ஒரே அடர்ந்த காட்டு கருவேல மரங்களாக இருப்பதால் திருடர்கள் அச்சத்துடனே பெண்கள் சென்று வருகின்றனர். எனவே அத்தானூர் கிராமத்தில் ஒரு புதிய ரேஷன் கடையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் ரேஷன் கடை இல்லாமல் காவனூர் செல்ல வேண்டி இருக்கின்றது. டூவீலர் மற்றும் வண்டி வாகனங்கள் வைத்திருக்கும் நபர்கள்  எப்படியாவது சென்று பொருட்களை வாங்கி விட்டு வந்து விடுகிறோம். வயதான ஆட்கள் வசதி இல்லாத முதியவர்கள், பெண்கள் போன்றவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கருவேலங்காடுகளை பார்க்கும்போது ஆண்கள் தனியாக சென்று வருவதற்கே பயமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் பெண்கள் தனியாக சென்று பொருட்கள் வாங்கி வருவதற்கு அச்சமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராம மக்களின் நலன் கருதி எங்கள் கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். குறைந்த பட்சம் பகுதிநேர கடையாவது அமைத்து தர முன்வர வேண்டும் என்றார்.

Tags : ration shop ,Sami Attanur ,
× RELATED ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை...