வயலில் தண்ணீர் தேங்கியதால் கமுதியில் அழுகிய மிளகாய் செடிகள்

கமுதி, டிச.11: கமுதி பகுதிகளில் தொடர் மழையால் மிளகாய் விவசாயம் பாதித்துள்ளது. கமுதியின் சுற்றுவட்டார பகுதிகளான பேரையூர், சேர்ந்தகோட்டை, கோவிலாங்குளம், புதுக்கோட்டை, செங்கப்படை, நெருஞ்சுப்பட்டி, தோப்படைபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  நிலப்பரப்பில் மிளகாய் விவசாயம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, நிலங்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் அழுகி பாதிப்படைந்துள்ளது. இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>