×

காமராஜர் நீர்த்தேக்கத்தில் அமைச்சர் ஆய்வு

சின்னாளபட்டி, டிச. 11: ஆத்தூர் வட்டம் காமராஜர் நீர் தேக்கத்தில், நீர்வரத்து மற்றும் நீர்   இருப்பு குறித்து கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், வனத்துறை   அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் தண்ணீர் மறுகால்  பாயும்  பகுதிக்கு சென்று மலர்தூவி வணங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆத்தூர் காமராஜர் அணையில் நீர் அதிகளவில் சேமிக்கப்பட்டுள்ளது.   அணையின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு திண்டுக்கல் நகருக்கு தினசரி 12   மில்லியன் லிட்டர் குடிநீர், அடுத்த ஆண்டு டிச.31 வரை பற்றாக்குறை   இல்லாமல் வழங்க முடியும்’ என்றார். ஆய்வின் போது மாவட்ட வருவாய்   அலுவலர் கோவிந்தராசு, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா, மாநகராட்சி ஆணையாளர்   பாலசுப்பிரமணியம்,  திண்டுக்கல் நகர கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : inspection ,Kamaraj Reservoir ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...