×

சுகாதார ஆய்வாளர்கள் தினம்

நத்தம், டிச.11: நத்தம் அருகே உலுப்பகுடி வட்டார மருத்துவ அலுவலக வளாகத்தில் சுகாதார ஆய்வாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா கலந்து கொண்டு சுகாதார ஆய்வாளர் தினம் டிச. 10ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். மருத்துவ பணியில் சுகாதார ஆய்வாளர்களின் பணி மகத்தானது. கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் மருத்துவர்களுடன் இணைந்து களப்பணி செய்து தொற்று பரவாமல் இருக்க அரும் பணியாற்றி வந்திருக்கிறீர்கள். இதேபோன்று வரும் காலங்களிலும் மக்களுக்கான சேவையில் தங்கள் பணி சிறக்க வேண்டும்.’ என்று பேசினார். பணி நிறைவு செய்த சுகாதார ஆய்வாளர்கள் மச்சக்காளை, சேவியர், சின்னான், காதர்மீரான், கணேசன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.

Tags : Health Analysts ,
× RELATED அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் தின விழா