×

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு

ஒட்டன்சத்திரம், டிச.11: ஒட்டன்சத்திரத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் சத்யா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் நாம் தமிழர், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது  ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திருமலைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு