×

கடை முன் உச்சா போறாங்க.. கப் அடிக்குது கழிவறை கட்டி தரக்கோரி மருந்து கடைக்காரர் தர்ணா

திருச்சி, டிச.11: கடை முன் சிறுநீர் கழிப்பதை தடுக்க கழிவறை கட்டி தரக்கோரி திருச்சி கோட்ட அலுவலகம் முன் மருந்து கடைக்காரர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை அன்னை நகர் 3ம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி(52). இவர் பாலக்கரை மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் அரியமங்கலம் கோட்ட அலுவலகம் எதிரே சித்த மருந்து கடை வைத்துள்ளார். இரவில் கடையை அடைத்துவிட்டு சென்றதும், அந்த வழியே செல்லும் பலர் கடை முன் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் கடையை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்டித்து ராமசாமி நேற்று அப்பகுதியில் உள்ள கோட்ட அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மெடிக்கல் முன் சிறுநீர் கழிப்பதை தடுக்க அப்பகுதியில் கழிவறை அமைத்து தர வேண்டும் இல்லை என்றால் சிறுநீர் கழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோரிக்கையை மனுவாக கொடுக்காமல் போராட்டம் நடத்துவது ஏற்படையதல்ல என போலீசார் கண்டித்ததால் போராட்டத்தை கைவிட்ட அவர் மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு அளித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ucha Boranga ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி