×

விரைந்து சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு

முசிறி, டிச.11: முசிறியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சிவபதி, முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட பலர் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினர். கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட மண்டல பொறுப்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது, கரூர் பகுதியில் 406 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டி உள்ளார்.
அடுத்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முசிறி பகுதியில் ரூ.500 கோடியில் காவிரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கும் வகையில் புதிய கதவணை அமைக்க திட்டம் தயார் படுத்தப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் பேட்டரி பஸ் வசதிக்காக சி 40 ஒப்பந்தத்தில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி 12 ஆயிரம் பஸ்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ். மாணவரணி மாவட்ட செயலாளர், திருப்பைஞ்சீலி கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கி தலைவர் அறிவழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : pruning ,
× RELATED தொடர் மழை, பூச்சி தாக்குதலால் செடிகளிலேயே அழுகி வரும் கத்தரிக்காய்