அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் வடக்கு மாவட்ட காங். சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா

திருச்சி, டிச.11: மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றுதல், இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றினார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி கணபதி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறியாளர் பிரிவு தலைவர் கணபதி ஆகியோர் 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினர். இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், விஜய் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் தங்கராஜன், நகர தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், மாவட்ட செயலாளர் ஞானகுரு, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>