வீரநாராயணமங்கலத்தில் ஆற்றில் இடிந்து விழுந்த நிழற்குடை

நாகர்கோவில், டிச. 11:   வீரநாராயணமங்கலம் கண்டமேட்டுகாலனியில்  கடந்த சில வருடத்திற்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இருந்தது. நிழற்குடைக்கு  பின்புறத்தில் பழையாறு செல்கிறது. பழையாற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது நிழற்குடையின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் நிழற்குடையின் கீழ் பகுதி போதிய பிடிமானம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்தமழையால் மேலும் மண் அரிக்கப்பட்டு  நிழற்குடை  ஆற்றில் விழுந்தது.

Related Stories: