சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 7ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வரும் செம்டம்பர் 17ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக கட்சி் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். விஜய் வருகையை பொறுத்து வரும் தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பார்போம். தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்துதான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
