×

அமித்ஷா 1,000 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசை அகற்றுவோம் என்றும் அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையோடு பேசியிருக்கிறார் அமித்ஷா. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறுகிற அமித்ஷா, அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை கூட உச்சரிக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நீட் திணிப்பு, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்காக பரிந்து பேசும் அமித்ஷா, அதற்காக ரூ.20 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கி விட்டு, 24,000 பேர் பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூ.609 கோடி ஒதுக்கியவர் தமிழ் மொழிக்காக, திருக்குறளுக்காக அமித்ஷாவின் பேச்சு நீலி கண்ணீராக இருக்குமே தவிர, அதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Amit Shah ,BJP ,Tamil Nadu ,Selvapperuntaka ,Chennai ,Congress ,DMK government ,AIADMK ,National Democratic Alliance ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...