அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் தின விழா

அணைக்கட்டு, டிச. 11: அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் தினம் கொண்டாடபட்டது. நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளரும், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில துணை தலைவருமான சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமை தாங்கி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு இனிப்புகளை ஊட்டினார்.

அதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும் கொரோனா வைரஸ் அதிகரித்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி கவுரவித்தனர்.

Related Stories:

>