வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பைங்காநாடு ஞானசேகரன் இல்ல திருமண விழா

மன்னார்குடி, டிச.11: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பைங் காநாடு சு.ஞானசேகரன் இல்ல மணவிழா தஞ்சையில் கோலாகலமாக நடை பெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மணமக்களை வாழ் த்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் வசிக்கும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும், திமுக பிரமுகருமான பைங்காநாடு சு.ஞானசேகரன்-பானுமதி ஆகியோரின் மகன் ஜி. ஜெயகார்த்தி பிஇ, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த காளிங்கராயன்பட்டி இரா.முத்துக் கருப்பன்-ராணீஸ்வரி ஆகியோரின் மகள் எம். கிருபா பிஇ, எம்பிஏ ஆகியோரின் திருமணம் நேற்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாராஜா திருமண மகாலில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில், திமுக பொருளாளர் டிஆர் பாலுஎம்பி, தஞ்சை எம்பி எஸ்எஸ் பழனி மாணிக்கம், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் டாக்டர் திவாகர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, துரை சந்திரசேகரன், உரத்தநாடு எம்.ராமச்சந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, முன்னாள் எம்பி ஏகேஎஸ் விஜயன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் திமுக எம்எல்ஏ உரத்தநாடு ராஜ மாணிக்கம், அமமுக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் மன்னை சேரன்குளம் மனோகரன், நீடா செந்தமிழ்ச்செல்வன், கொரடாச்சேரி பாலச்சந்தர், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், மன்னார்குடி வர்த்தக சங்க அமைப்பு செயலாளர் எஸ்எம்டி கருணாநிதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல செயலாளர் செந்தில் நாதன், திரு வாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் மேலவாசல் தன்ராஜ், ஐவி குமரேசன், பாலஞானி, விஎஸ்ஆர் தேவதாஸ், தொழிலதிபர் வடுவூர் அன்பு வேல்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் மகதை பாரதி மோகன், மாவட்ட கவுன்சிலர்கள் சோபா கணேசன், கலைவாணி மோகன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வா கிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணவிழாவிற்கு வந்த அனைவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் மாநில துணைத் தலைவர் பைங்காநாடு சு.ஞானசேகரன், பானுமதி ஞானசேகரன், டி. கார்த்திகேயன், ஜெயப்ரியா கார்த்தி கேயன், ஜி.சுந்தர் ஆகி யோர் வரவேற்றனர். மன்னார்குடி வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஆர்வி.ஆனந்த் நன்றி கூறினார்.

Related Stories:

>