பிரமுகர்கள் வாழ்த்து வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக விசிகவினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.11: வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மன்னார்குடியில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை உட னடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னை நகர, ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகே ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச்செயலாளர் ரமணி, நகர செயலாளர் அறிவுக்கொடி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கும் எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>