பி.ஆர்.பாண்டியன் பேட்டி சூரப்பா பதவியேற்றபோதே தேமுதிக எதிர்ப்பு தெரிவித்தது

திருவாரூர், டிச.11: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றபோதே தேமுதிக எதிர்ப்பு தெரிவித்து என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் நிவாரண பொருட்களை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் எத்தனையோ படித்த அறிவு ஜீவிகள் இருக்கும்போது கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் பதவி ஏற்றபோதே தேமுதிக தனது எதிர்ப்பினை தெரிவித்தது. இந்நிலையில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். தேமுதிகவை பொருத்தவரை இந்த நிமிடம் வரையில் அதிமுக கூட்டணியில் தான் நீடிக்கின்றோம். நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சியை துவங்கி பெயரை அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். தமிழகத்தில் மழை பாதிப்பின்போது அரசின் செயல்பாடு நிறை, குறைகள் கலந்துள்ளதாக தான் பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>