×

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர், அரியலூரில் நடந்தது

பெரம்பலூர், டிச. 11: கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அருகே பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட பொருளாளர் கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ஸ்டாலின், உதயகுமார், மாநில துணை செயலாளர்கள் கராத்தே பெரியசாமி, ராஷீத் அலி, சீனிவாசராவ், தமிழ்குமரன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வீரசெங்கோலன் கண்டன உரையாற்றினார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல், மாவட்ட அமைப்பாளர்கள் பாண்டுரங்கன், வேலுசாமி, குணா விஜயகுமார், அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட மேடையில் ஏர்கலப்பையை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், இச்சட்டங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், டெல்லியில் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மதிப்பளித்து சட்டத்தை புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், கருப்புசாமி, தொகுதி செயலாளர் மருதவாணன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

30 அடி வரை தேக்கி வைக்க திட்டம்
41.67 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலா தலமான விசுவக்குடி அணைக்கட்டில் இதுவரை 21 மில்லியன் கனஅடி நிரம்பியுள்ளது. குறிப்பாக 33 அடி உயரமுள்ள அணைக்கட்டில் தற்போது 24 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தமுறை சீராக நீர்வரத்து தொடர்வதால் அணை நிரம்பும் வரை தண்ணீரை 30 அடி வரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Liberation Leopards ,withdrawal ,Ariyalur ,Perambalur ,
× RELATED விசிக பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி