தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நாளை(24ம் தேதி) 7 மணிக்கு மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 14, 16, 18, 20 வயதுக்குள் 4 பிரிவுகளில் தடகள போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படுவோர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நாளை(24ம் தேதி) காலை 7 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாக விளையாட்டு அரங்கில் பெயர் பதிவு செய்து நம்பர் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளர் 2 போட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தடகள சங்க தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
