×

அகரவட்டாரம் கிராமம் சாவடி குளத்தில் விரைவில் படித்துறை கட்டவேண்டும்

கொள்ளிடம், டிச.11: அகரவட்டாரம் கிராமத்தில் சாவடி குளத்தில் விரைவில் படித்துறை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகரவட்டாரம் கிராமத்தில் சாவடி குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 201ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை கட்டுவதற்கு 14வது மானியக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராம ஊராட்சி மூலம் கட்டுமான பணி நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த பணி இதுவரை நடைபெறவில்லை.

இதுகுறித்து அகரவட்டாரம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி கூறுகையில், தாய் திட்டத்தின் மூலம் சாவடி குளத்துக்கு படித்துறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை படித்துறை கட்டி முடிக்கவில்லை. இது குறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு அளித்தும் ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. படித்துறை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் படித்துறை கட்டுமான பணி மேற்கொள்ளாமல் கட்டி முடித்தது போன்று ஆவணம் தயார் செய்து பணம் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே சபரி குளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்திற்கு உடனடியாக படித்துறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் ஆகியோர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : village ,Agarvattaram ,stairway ,booth pond ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...